நீரில் மூழ்கி ஒருவர் பலி : வடமராட்சியில் சம்பவம்!
Friday, November 16th, 2018
வடமராட்சி அல்வாய் பிரதேசத்தில் உள்ள குளம் ஒன்றில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.
நீராடச் சென்ற குறித்த நபர் வீடு திரும்பாத நிலையில், அவரது குடும்பத்தவர்கள் கொடிகாமம் காவல்நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்திருந்தனர்.
இதனை தொடர்ந்து கடற்படையினர் குளத்தில் தேடுதல்களை மேற்கொண்டனர். இதன் போது அவரது உடல் சேற்றில் சிக்கியிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் பலியானவர் அல்வாய் பகுதியை சேர்ந்த 47 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்காக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் - பிரதமர்!
ஊடகங்கள் பொறுப்புடன் செய்திகளை வெளியிட வேண்டும் – அமைச்சர் ரவூப் ஹக்கீம்!
மக்கள் வெளிநாட்டுகளுக்கு செல்வது பிரச்சினைக்குரிய விடயமல்ல - வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு!
|
|
|


