ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்காக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் – பிரதமர்!

Saturday, November 19th, 2016

நாட்டில் இனங்களுக்ககிடையிலான ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்காக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தில் குழுநிலை விவாதம் இன்று காலை நாடாளுமன்றத்தில் ஆரம்பமானது. ஜனாதிபதி, பிரதமர் அலுவலகங்கள் பாராளுமன்றம் உள்ளிட்ட மேலும் 22 விடயங்கள் இன்றைய தினம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

எதிர்கட்சி பிரதம கொறடா நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸநாயக்க விவாதத்தை ஆரம்பித்து வைத்தார்.

விவாதத்தில் கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றுகையில், நாட்டில் இனங்களுக்ககிடையிலான ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்காக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

அனைவருக்கும் ஒரே வகையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். நாட்டிவ் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்தும் பொறுப்பு ஜனாதிபதியை சார்ந்ததாகும். இதற்காக ஜனாதிபதி அர்ப்பணித் திருப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார். தேசிய ஐக்கியத்தை அனைவரும் எதிர்பார்க்கின்றனர். இதனை சீர்குலைப்பதற்கு சிலர் செயற்படுகின்றனர். இதனை தோற்கடிக்க வேண்டும். நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்குவதைப் போன்று வசதிகளும் அதிகரிக்கப்பட வேண்டுமென்றும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும், உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு தற்போதிலும் பார்க்க வசதிகள் கிடைக்க வேண்டுமென்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.

Ranil-Wickremesinghe-AP

Related posts:

பதவி ஏற்ற முதலாம் ஆண்டு நிறைவு தொடர்பான நிகழ்வுகள் எதனையும் ஏற்பாடு செய்ய வேண்டாம் - ஜனாதிபதி அறிவ...
அனைத்து சுற்றறிக்கைகளும் இரத்து - ஓகஸ்ட் 2 முதல் அரச சேவை முழுமையாக வழமைக்கு திரும்பும் என ஜனாதிபதிய...
செலுத்தப்பட்டது எரிபொருள் கப்பலுக்கான கட்டணம் - பெட்ரோல் தாங்கிய கப்பல் இன்று நாட்டை வந்தடையும் என அ...