நிதி நிறுவனங்களில் வைப்புச் செய்யும் பணத்தில் 6 இலட்சத்திற்கு மட்டுமே மத்திய வங்கி பொறுப்பு – அரசாங்கம்!

Friday, June 5th, 2020

நிதி நிறுவனங்களில் வைப்புச் செய்யும் பணத்தில் ஆறு  இலட்சம் ரூபாவிற்கு மட்டுமே இலங்கை மத்திய வங்கி பொறுப்புச் சொல்லும் என அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இயங்கி வரும் பல்வேறு நிதி நிறுவனங்களில் மக்கள் பணத்தை வைப்புச் செய்து வருகின்றனர். இவ்வாறு வைப்புச் செய்யப்படும் பணத் தொகைகளில் ஆறு லட்சம் ரூபா வரையிலேயே, இலங்கை மத்திய வங்கி பொறுப்பு ஏற்கும் என்ற வகையில் பந்துல குணவர்தன கருத்து வெளியிட்டுள்ளார்.

எனவே நாட்டின் நிதி நிறுவனங்களில் பணத்தை வைப்புச் செய்வோர், தங்களது வைப்புப் பணத் தொகையில் எந்தளவு தொகை மிகவும் பாதுகாப்பானது என்பது பற்றி அறிந்திருக்க வேண்டியது அவசியமானது என தாம் கருதுவதாக பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நீண்ட காலம் இலங்கையில் இயங்கி வந்த நிதி நிறுவனமொன்று மூடப்பட்டதனைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தில் பணத்தை வைப்புச் செய்திருந்த வைப்பாளர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பெருந்தொகை பணத்தை நிதி நிறுவனங்களில் வைப்புச் செய்துள்ளவர்கள் இந்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்துவது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts: