நீதிபதி சரவணராஜா விவகாரம் – முழுமையான விசாரணையை முன்னெடுப்பதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் 2 குழுக்கள் நியமனம்!
Tuesday, October 3rd, 2023
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா, பதவி விலகி நாட்டிலிருந்து வெளியேறியமை தொடர்பில், முழுமையான விசாரணையை முன்னெடுப்பதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் 2 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் பணிப்புரைக்கு அமைய, குறித்த விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தது
இதற்கமைய, இன்றையதினம் குறித்த குழுக்கள் முல்லைத்தீவு நோக்கி செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
வர்த்தகர் ஒருவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு!
எதிர்வரும் செவ்வாய் முதல் இலங்கை - நேபாளத்துக்கு இடையில் மீண்டும் நேரடி விமான சேவை!
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் அரசாங்கம் எந்வொரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபட...
|
|
|


