இலத்திரனியல் மென்பொருளூடாக காணி உறுதிப்பத்திரங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை – பதிவாளர் நாயக திணைக்களம்!
Wednesday, January 22nd, 2020
காணி உரிமங்களை இலத்திரனியல் மென்பொருளூடாக பதிவுசெய்வதற்கு பதிவாளர் நாயக திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
காணி உறுதிப்பத்திரங்களைப் பதிவுசெய்வதில் காணப்படும் மோசடிகளை இல்லாது செய்வதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் என்.சி. விதானகே தெரிவித்துள்ளார்.
காணி பதிவுசெய்வதற்கான புதிய மென்பொருளை அடுத்த மாதம் தொடக்கம் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் பதிவாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், காணிப் பதிவுகள் விரைவுபடுத்தப்படும் எனவும் பதிவாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை போலிக் காணி உறுதிப்பத்திரங்கள் தயாரிப்பு தொடர்பில் வருடமொன்றுக்கு சுமார் 3,000 முறைப்பாடுகள் பதிவாகுவதாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
முன்பள்ளி பாடசாலைகளை அபிவிருத்தி தொடர்பில் முறையான வேலைத் திட்டம் அவசியம்!
அரசியல் கட்சிகள் தொடர்பில் புதிய சட்டம் - தேர்தல்கள் ஆணைக்குழு!
நாட்டில் 10 நாட்களில் 591 பேர் மரணம் 21 ஆயிரத்து 344 பேருக்கு தொற்றுறுதி - சுகாதார அமைச்சர் பவித்திர...
|
|
|


