நீதித்துறையில் நாம் தலையிடவில்லை – ஜனாதிபதி தெரிவிப்பு!
Friday, September 11th, 2020
இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்லால் ஜெயசேகரவுக்கு தேர்தலுக்கு முன்னர் மரண தண்டனை வழங்கிய நீதிபதி நாடாளுமன்றத்துக்கு செல்ல அனுமதி வழங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியசர்களும், அரசியலமைப்பு பேரவையினால் நியமிக்கப்பட்டவர்கள்.
அவர்களை நியமித்த அரசியல் அமைப்பு பேரவையில் கரு ஜெயசூரிய ,சஜித் பிரேமதாச மற்றும் தலதா அத்துகோரளை ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்
அமைச்சர்களுடனான சந்திப்பு ஒன்றின்போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே நீதித்துறையில் தாமோ அல்லது பிரதமரோ தலையிடவில்லை என்பதை இது சுட்டிக்காட்டுவதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.
Related posts:
விபத்தில் இளைஞன் உயிரிழப்பு!
அடைக்கலம் வழங்கிய இலங்கையர் நாடு கடத்தப்படும் அபாயம்!
9 ஆயிரம் முச்சக்கரவண்டிகள் பதிவு - வரிசைகள் இவ்வாரம் குறைவடையும் எனவும் நம்பிக்கை!
|
|
|


