நில விடுவிப்பு விவகாரம்: யாழ்ப்பாணத்தில் பொது அமைப்புகள் ஒன்றுதிரண்டு போராட்டம்!
Wednesday, February 22nd, 2017
படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி நாட்டின் பல பகுதிகளிலுள்ள பொது அமைப்புக்கள் திரண்டு யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்றிணைந்து இன்று (22) முன்னெடுத்துள்ள இந்த ஆர்ப்பாட்டம் பின்னர் யாழ். மாவட்ட செயலகம் வரை பேரணியாக சென்று மகஜர் கையளிக்கப்படவுள்ளது.
யாழ். தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் கிராமிய உழைப்பாளர் சங்கம் திருகோணமலை உதயம் மாவட்ட குடும்ப தலைமைத்துவ பெண்கள் அமைப்பு திருகோணமலை மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் வலி. வடக்கு மீள்குடியேற்ற சங்கம் அம்பாறை பானம பற்றை பாதுகாப்பு அமைப்பு மொனறாகலை ஊவா வெல்லஸ்ஸ மக்கள் அமைப்பு மயிலிட்டி கடற்றொழிலாளர் சங்கம் வலி. வடக்கு இடம்பெயர்ந்தோர் மக்கள் ஒன்றியம் மயிலிட்டி கிராம அபிவிருத்தி சங்கம் மயிலிட்டி மக்கள் அமைப்பு நீர்கொழும்பு டெலிகொம் மனிதவலு போராட்ட ஒற்றுமை முன்னணி ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து இவ் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளன.


Related posts:
|
|
|


