நிர்மாண கைத்தொழிலில் முறைகேடுகள் அதிகரிப்பு – ஒரு வருடத்திற்குள் ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் சுட்டிக்காட்டு!

Monday, December 12th, 2022

நிர்மாண கைத்தொழிலில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் கடந்த ஒரு வருடத்திற்குள் சுமார் ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம், பொறியியலாளர் சஞ்ஜீவ ஜயசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியுடன் நிர்மாணத்துறை தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக கொடுப்பனவு செலுத்தப்படாமை தொடர்பிலேயே அதிக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகளை எழுத்துமூலம் தமது அதிகார சபைக்கு சமர்ப்பிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

0000

Related posts:


சந்திரகுமாரின் வெளியேற்றத்தின் பின்னரே வன்னியில் எமது கட்சி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது – ஈ....
கறுப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றும் வங்கி அதிகாரிகள் - சட்ட நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு அமைச்சு ...
குற்றவியல் விவகாரங்கள் தொடர்பில் பரஸ்பர சட்ட உதவிகள் தொடர்பில் மாலைதீவுடன் இலங்கை ஒப்பந்தம்!