குற்றவியல் விவகாரங்கள் தொடர்பில் பரஸ்பர சட்ட உதவிகள் தொடர்பில் மாலைதீவுடன் இலங்கை ஒப்பந்தம்!
Saturday, September 24th, 2022
இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான குற்றவியல் விவகாரங்கள் தொடர்பில் பரஸ்பர சட்ட உதவிகள் தொடர்பில் உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்ள நீதி, சிறைச்சாலை செயற்பாடுகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த ஒப்பந்தம் இரு நாடுகளும் ஒருங்கிணைந்த விசாரணைகளை மேற்கொள்ளும்போது ஏற்படும் தடைகளைத் தவிர்க்க உதவும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர உறவுகளை வளர்க்க உதவும் என அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தேசிய சிறுவர் தின வைபவம் - ஜனாதிபதி பிரதமர் தலைமையில் இன்று!
அமைச்சுப் பதவி பெறுவோரின் கல்வித் தகைமையை வெளிப்படுத்த வேண்டும் - பப்ரல் அமைப்பு கோரிக்கை!
கட்டுநாயக்க ஊடாக நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டுவர முற்பட்ட 50 கிலோகிராம் நிறையுடைய ஹசீஷ் ரக போதைப்...
|
|
|


