ஐ.நா. சிறுவர் நிதியம், 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட திட்டம்!

Tuesday, June 13th, 2017

அடுத்துவரும் நான்கு வருடங்களில் இலங்கை சிறுவர்களுக்காக 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெப்) திட்டமிட்டுள்ளது

பொருளாதார, கொள்கை திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்

யுனிசெப் அமைப்பின் பிரதிநிதிகளுடன் நியுயோர்க்கில் தாம், நடத்திய பேச்சுவார்த்தையின்போது இதற்கான இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

இதற்கமைய, 2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டுவரை இலங்கை சிறார்களுக்கு விசேட வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன

இந்த வேலைத் திட்டத்திற்கான திட்டவரைவு எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் விழிப்புணர்வை மேம்படுத்தல் மற்றும் சிறுவர்களின் திறமைகளை மேம்படுத்தல் போன்ற இலக்குகளை மையப்படுத்தும் வகையில் இந்த செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன

Related posts:


வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டிற்கு பலமே அன்றி சுமையில்லை - பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரி...
60 வயதுக்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மூன்றாவது கொவிட் தடுப்பூசி - சுகாதார சேவைகள் பணிப்...
நெருக்கடியை சமாளிக்க நாட்டின் சகலரும் தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும் – சுதந்திர தின உரை...