நிர்ணய விலையில் அரிசியை விற்பனை செய்ய முடியாதென அறிவிப்பு!

கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்ய முடியாது என அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது விடயமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அரிசி ஆலை உரிமையாளர்கள் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். மரந்தாகாமுல அரிசி வர்த்தகர் பேரவையின் தலைவர் பீ.கே. ரஞ்சித் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையில் அரிசி விற்பனை செய்ய முடியாது எனவும் அவ்வாறு விற்பனை செய்தால் ஒரு கிலோ கிராம் அரிசி விற்பனையின் ஊடாக 50 ரூபா நட்டம் ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் அனைத்து அரிசி ஆலைகளிலும் அரிசி உற்பத்தி நடவடிக்கைகள் தற்பொழுது இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அரிசி சந்தையின் பணிகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாகவும், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையில் அரிசி விற்பனை செய்வது நடைமுறை சாத்தியமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
யாழில் மாதா சொருபம் உடைப்பு!
இலங்கையில் சமூக பரவலாகியுள்ளது கொரோனா - PCR பரிசோதனையில் பலனில்லை என இலங்கை ஆய்வக சங்கம் எச்சரிக்கை!
ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட உயர்வு - அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைகிறது!
|
|