நியூசிலாந்தில் கத்தோலிக்க ஒருவரால் இஸ்லாமியர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டதற்கான எதிர்தாக்குதலாகத்தான் ஏப்ரல் 21 தாக்குதல் – அர்ஜுன ரணதுங்க தெரிவிப்பு!

Sunday, September 24th, 2023

கத்தோலிக்க  பள்ளிவாசிகள்  நியூசிலாந்தில் இடம்பெற்ற பிரச்சனையின் போது கத்தோலிக்க ஒருவரால் இஸ்லாமியர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு எதிர்தாக்குதலாகத்தான் ஏப்ரல் 21 தாக்குதல் மேற்கொள்ளபட்டது என கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் இடம் பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது உயிர்த்த ஞாயிறு  தாக்குதல் தொடர்பான இறுதிநாள் விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

சக்ரானை அவர் சொன்ன குரல் பதிவில் 10 விடயங்கள் சொல்கிறார். அந்த 10 விடயங்களில் மிக முக்கியமான விடயங்களை நான்  சொல்லுகின்றேன். கத்தோலிக்க  பள்ளிவாசிகள்  நியூசிலாந்தில் இடம்பெற்ற பிரச்சனையின் போது கத்தோலிக்க ஒருவரால் இஸ்லாமியர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு எதிர்தாக்குதலாகத்தான் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்படுகிறது என்றும் சுற்றுலா பயணிகள், சுற்றுலா ஹோட்டல்களிலே  மத்திய கிழக்கு நாடுகளிலே எங்களுடைய இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல் படுகின்றார்கள். அவர்கள் விடுமுறையை களிப்பதற்காக இலங்கையில் உள்ள ஹோட்டல்களுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு எதிராகத்ததான்  இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்

இதன்போது பதிலளித்த பிரசன்னரணதுங்க கில்மான் கமாட் இந்த குரல்பதிவினை நீங்கள் கேட்கின்றபோது நான் கடவுளிடம் சென்றிருப்பேன். கடவுள் ஏற்று கொள்ளவேண்டும். இது தற்கொலை அல்ல இது தங்களால் வழங்கப்படுகின்ற சாரம் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். இது கடவுளினுடைய பெயரில் செய்யபடுகின்ற ஒன்று என்று அந்த குரல்பதிவில் உள்ளது என தெரிவித்தார்.

இன்சாட் அஹமட் அவரும் அப்படியான ஒரு செய்தியை கொடுத்திருக்கிறார். தெஹிவளை ஹோட்டலில் குண்டு வெடிக்க செய்த ஜமீலும் அப்படியான செய்தியை கூறி இருக்கிறார். இப்படி சகல குண்டுதாரிகளும் ஏன் அவர்கள் குண்டு வெடிக்க செய்திருக்கிறார் என்பதை சொல்லி இருக்கிறார்.

நாங்கள் பல விதமான கருத்துக்களை கொண்டிருக்கின்றோம்.  எதிர் கட்சியிலும் சிலர் பல விதமான கருத்துக்களை கொண்டிருக்கிறார்கள். அரசாங்க கட்சிகளும் அப்படித்தான். குண்டுத்தாக்குதல் செய்தவர்களும் இப்படி பல விஷயங்களை சொல்கிறார்கள். இதன் காரணமாகதான்  தொடர்ச்சியாக சொன்னேன் நாங்கள் சகலரும் ஒன்றிணைந்து இந்த விசாரணையை  மீண்டும் செய்வோம். தொடர்ச்சியாக நான் அதை தான் கேட்டேன். இன்றும் கூட நான் உங்கள் அனைவரிடமும் கேட்க விரும்புவது  நாங்கள் ஒன்றாக இந்த பிரச்சினையை தீர்ப்போம். அப்போதுதான்  யாருக்கும் மரிக்க வேண்டி இருக்காது. அப்போது தான் விசாரணையின் போது உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்காமல் மற்றையவர்கள் மீது குற்றம் சுமத்திகொண்டிருப்போம். என தெரிவித்தார்.

இதன்போது  குறுக்கிட்ட சாணக்கியன்  தேவாலயங்கள் சரி சுற்றுலா  பயணிகள் சரி மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்பள்ளி மாணவர்கள் 14 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக அது சரியா? என கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: