தொடருந்து திணைக்களத்திற்கு அதிகாரம் உள்ளது – நிதியில்லை – விரைவில் புதிய சட்டமூலம் அமைச்சர் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Sunday, April 30th, 2023

புதிய தொடருந்து சாரதிகளை நியமிப்பதற்கு தொடருந்து திணைக்களத்திற்கு அதிகாரம் உள்ளபோதும் நிதி பற்றாக்குறையாகவே உள்ளதாக போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தொடருந்து சாரதிகள் 60 வயதை பூர்த்தி செய்ததன் பின்னரும் கூட புதிய சாரதிகளை பணியமர்த்தும் வசதி திணைக்களத்திற்கு இல்லை என்றும்  அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வருடம் தொடரூந்து ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக 2.3 பில்லியன் ரூபாவும் மேலதிக நேர கொடுப்பனவுகளை வழங்குவதற்காக 07 பில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

இதன் ஊடாக குறைந்தளவு வருமானமே கிடைப்பதாகவும் எனவே இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு விரைவான தீர்வுகளை பெற்றுக்கொடுக்கின்ற அதிகார சபையாக தொடரூந்து திணைக்களம் மாற்றப்படவேண்டும் என்றும் பந்துல குணவர்தன குறிப்பிட்டள்ளார்.

இதேவேளை எதிர்காலத்தில் அதற்கான சட்டமூலம் கொண்டுவரவுள்ளதாக கடந்த 28ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது பந்துல குணவர்தன இதனை தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts: