திருத்தங்களுடன் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளோம் – நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Thursday, March 9th, 2023

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் நாடாளுமன்றத்திற்கு முழுமையாக சமர்ப்பிக்கப்பட்டு சபை ஒத்திவைப்பு வேளை விவாதமும் வழங்கப்படும். திருத்தங்களுடன் தான் நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன ஆகவே நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு தொடர்பில் நாடாளுமன்றம் இறுதி தீர்மானத்தை எடுக்க வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கலால் சட்டம் ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது –

நாடு பொருளாதார ரீதியில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பின்னணியில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு மற்றும் அதனுடனான ஏனைய ஒத்துழைப்புக்கள் தொடர்பில் எதிர்க்கட்சியின் உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நன்கு அறிவார் என்பதை நாம் அறிவோம்.

பாரிய போராட்டத்திற்கு மத்தியில் தற்போது நாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு ஒரு தீர்வாக அமையாது என்பதை நன்கு அறிவோம்.

நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை தொடர்ந்து பொருளாதார முகாமைத்துவத்தை மிக அவதானமாக முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டுஇஆகவே சர்வதே நாணய  நிதியத்தின் ஒத்துழைப்புடன் இலங்கையின் கடன் நிலைபேறான தன்மையில் பேணப்படும்.

நாடாளுமன்றத்துக்கு புறம்பாக சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. முழுமையான நிபந்தனை ஒப்பந்த அறிக்கை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும்.இரகசியமான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

நாணய நிதியம் முன்வைத்த நிபந்தனைகளை திருத்தங்களுடன் ஏற்றுக்கொண்டுள்ளோம். முன்வைக்கப்படும் நிபந்தனைகளை தாங்கிக் கொள்ள கூடிய நிலை உள்ளதா என்பதை தீர்மானிக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: