கடந்த சில தினங்களில் திடீர் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Friday, April 15th, 2022

கடந்த சில தினங்களில் திடீர் விபத்துக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை காணக்கூடியதாக இருப்பதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தாதி பயிற்சிப்பிரிவின் தாதி அதிகாரி புஸ்பா ரமனி டி சொய்சா தெரிவிக்கையில், பண்டிகைக்காலத்தில் ஏற்படக்கூடிய இவ்வாறான விபத்துக்களை குறைத்துக்கொள்வதில் அனைவலும் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

வீதியில் செல்லும் போது வீதி ஒழுங்குவிதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுவதன் மூலம் விபத்துக்களை குறைத்துக்கொள்ள முடியும்.

மதுபாவனையினாலும் பாரிய அனர்த்தங்கள் இடம்பெறுகின்றன. திடீர் விபத்துக்களில் 85 வீதமானவை தனிநபர்களில் செயறபாடுகளினால் இடம்பெறுகின்றன என்றும் அவர் மேலும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts:

பாதிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு நீதி கிடைக்கவேண்டு - சமுர்த்தி அபிவிருத்தி சங்க செயலாளர் கோரிக்கை!
கையிருப்பிலுள்ள அரிசி தொகை செப்டம்பர் மாதம் வரையே போதுமானது - விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்...
அதிக விஷத்தன்மை கொண்ட முசுறு எறும்பு இனம் இலங்கையில் - கிராம மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெர...