நிதி அமைச்சர் பசிலின் இந்தியாவுக்கான பயணம் இலங்கைக்கு முக்கியமானதாக அமையும் – அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நம்பிக்கை!

Sunday, February 20th, 2022

நாடு அந்நிய செலாவணி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், இலங்கைக்கான இந்தியாவின் பொருளாதார நிவாரணப் பொதியை முறைப்படுத்த நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு விஜயம் செய்ய உள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் இரண்டு மாதங்களில் பசில் ராஜபக்சே இந்தியாவிற்க மேற்கொள்ளும் இரண்டாவது விஜயம் இதுவாகும்.

டிசம்பரில் பசில் ராஜபக்ச இந்தியா சென்றிருந்த நிலையில், “இந்தியாவிடமிருந்து 2.4 பில்லியன் டொலர் உதவியைப் பெற முடிந்தது எனவும், இதனால் பல பயனுள்ள விடயங்கள் நடைபெற்றதாகவும் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் இந்தியாவின் தலையீடு மிகவும் சாதகமானது மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இந்தியாவுடன் எமது பொருளாதாரத்தை நெருக்கமாக ஒருங்கிணைப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும், எமது சுற்றுலாப் பயணிகளில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவிலிருந்து வந்தவர்கள்” என்று அமைச்சர் கூறினார்.

உணவு மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான ஒரு பில்லியன் டொலர் கடனைப் பெறுவதற்கு பசில் ராஜபக்சேவின் அந்த பயணம் இலங்கைக்கு முக்கியமானதாக இருக்கும் என்றும் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: