அதிபர் பரீட்சையில் சித்தியடையாதோரை ஆசிரிய ஆலோசகராக நியமிக்க எதிர்ப்பு!

Wednesday, January 4th, 2017

அதிபர் சேவை தரம் 111 போட்டிப் பரீட்சையில் சித்தியடையாதோர் கடமை நிறைவேற்று அதிபராகப் பாடசாலைகளில் கடமையாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் ஆசிரிய ஆலோசகர்களாக நியமிக்கப்படவுள்ளமைக்கு வடக்கு மடாகாண ஆசிரிய ஆலோசகர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

ஆசிரிய ஆலோசகர் உள்ளிட்ட பதவிகளுக்கு கடமை நிறைவேற்று அதிபர்களாக கடமையாற்றியோர் விண்ணப்பிக்க முடியும் என்று வடக்கு மாகாண  கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்திருந்தார்.

பல வருடங்களாக போராட்டம் நடத்தி உயர் நீதிமன்றம் வரை சென்ற நீதிமன்றத் தீர்ப்பின்படி இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவை உருவாகுவதற்கான நடவடிக்கையில் எமது சங்கமும் கொழும்பு கல்வி அமைச்சும் தீவிரமாக செயற்பட்டு வரும் நிலையில் ஆசிரிய ஆலோசகர் சேவைப் பிரமாணக் குறிப்பிற்கு புறம்பாக கடமை நிறைவேற்று அதிபர்களைப் போட்டிப் பரீட்சையின்றி எழுந்தமானமாக இந்தப் பதவியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவது நல்லதல்ல.

இந்தச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டால், எமது சேவை உருவாக்கத்திற்குத் தடையாக இந்த நடவடிக்கை அமைந்துவிடும் என்பதால் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். கடமை நிறைவேற்று அதிபர்களுக்கு தீர்வு ஒன்றை முன்வைப்பதை எமது சங்கம் எந்த வகையிலும் ஆட்சேபிக்கவில்லை. அவர்களை இந்தச் சேவையில் உள்வாங்குவதாயின் உரிய முறையில் விண்ணப்பங்களைக்கோரி போட்டிப்பரீட்சையின் மூலமாக அவர்களைத் தெரிவு செய்வதை எமது சங்கம் ஆட்சேபிக்காது என்று வடக்கு மாகாண ஆசிரிய ஆலோசகர்கள் சங்கம் அனுப்பி வைத்ததாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

dscuk889133000_test_getty_80642645

Related posts: