மக்களின் அபிவிருத்திகளை முடக்கும் நோக்குடன் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் செய்கின்றனர் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீ ரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Friday, February 16th, 2024

நல்லாட்சி என கூறப்பட்ட ஆட்சிக்காலத்தில் கம்பரெலிய மற்றும் சப்ரிகம போன்ற திட்டங்கள் மக்களின் விருப்பகளுக்கு அப்பால் வடக்கு அரசியல்வாதிகளின் தனிப்பட்ட எதேச்சயான தெரிவாகவே இருந்தன என ஈழ மக்கள் ஜன நாயக கட்சியின் ஊடக பேச்சாளரும் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (16.02.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்க பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

ஜனாதிபதி செயலகத்தால் தற்போது வடக்கு அபிவிருத்திக்கென தரப்பட்ட நிதி யாழ் மாவட்டத்தின் 435 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் அந்தந்த பகுதி சமூக மட்ட அமைப்புகள் மற்றும் அப்பகுதி மூத்த  மக்கள் பிரஜைகள் மூலம் வெளிப்படையாக அரச அதிகாரிகள் முன்னிலையில் தெரிவுசெய்யப்பட்டிருந்தன

ஆயினும் இன்றைய யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இது தொடர்பாக ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள்  தமக்கு தெரியாமல் திட்டங்கள் தயாரிக்கப்பட்டதாக அப்பட்டமான பொய்யை உரைத்திருந்தார்கள்.

உண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய பிரதிநிதிகளும்  குறித்த  அபிவிருத்தி தெரிவான  கட்டங்களில் கலந்துகொண்டு தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் திட்டங்களையும் முன்வைத்திருந்தனர்.

குறிப்பாக வலிகாமம் வடக்கு பிரதேச செயலகத்தில் கிராம ரீதியாக தெரிவுசெய்யப்பட்ட திட்டங்களை ஆராய்ந்து அங்கிகரிக்கும் கூடு்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்  சுமந்திரனின் பிரதிநிதியாக வலிவடக்கு முன்னாள் தவிசாளர் சுகிர்தனும், தமிழ் மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனின் பிரதிநிதியும் கலந்துகொண்டு தமது கருத்துக்களையும் முன்வைத்திருந்தனர்.

ஆனால் இங்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தமக்கு இந்த விடயம் காலதாமதமாக அறிவிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

அவ்வாறாயின் காலதமாக அறிவிக்கப்பட்டிருப்பின் உடனடியாகவே சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களுக்கோ அரச அதிபருக்கோ தமது காரணங்களை தெரிவித்திருக்க வெண்டும்.

மாறாக மக்களின் தெரிவுகளாக முன்வைக்கப்பட்டுள்ள அபிவிருத்திகளை முடக்கும் நோக்குடன் கூட்டத்தில் தமது மெலினமான அரசியலை வெளிப்படுத்தியிருந்தனர் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: