நிதியுதவிகள் மற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் அடுத்த பாதீட்டில் பட்டியலிடப்படும் – பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவிப்பு!
Sunday, October 30th, 2022
சர்வதேச நாணய நிதியம், உலகங்கள், நட்பு நாடுகள் என்பவற்றின் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்ட நிதியுதவிகள் மற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் அடுத்த பாதீட்டில் பட்டியலிடப்படும் என பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் – நிதியுதவிகள் குறித்து நாடாளுமன்றுக்கு அறிவிப்பதற்கு முன்னர் ஜனாதிபதியினால் பாதீடு முன்வைக்கப்படும்.
அதில் இலங்கைக்கான நிதியுதவிகள் மற்றும் வேலைத்திட்டங்கள் உள்ளிட்டவை தொடர்பில் அறிவிக்கப்பட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்படும்.
அத்துடன் இலங்கை தொடர்பில் அறிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனினும் சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையிலேயே அனுமதிக்கப்பட வேண்டும் என பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


