நாவாலியூர் சோமசுந்தரப் புலவரைப் போற்றி வழிபடும் முகமாக விசேட நிகழ்வு!
Monday, July 17th, 2023
ஆடிப்பிறப்பு நாளில் நாவாலியூர் சோமசுந்தரப் புலவரைப் போற்றி வழிபடும் முகமாக விசேட நிகழ்வொன்று யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.
தங்கத் தாத்தா பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாகவுள்ள நாவாலியூர் சோமசுந்தரப் புலவரின் சிலையடியில் இன்று திங்கட்கிழமை(17) காலை குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது நாவாலியூர் சோமசுந்தரப் புலவரின் சிலைக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து பூக்கள் தூவப்பட்டது.
ஆடிப்பிறப்பு விசேட உணவுப் பண்டமான ஆடிக்கூழ் தயாரிக்கப்பட்டு அப்பகுதியில் நின்ற பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டது.
எதிர்வரும் காலங்களில் ஆடிப்பிறப்பு நாளில் நாவாலியூர் சோமசுந்தரப் புலவரை போற்றும் வகையில் நிகழ்வை மேற்கொள்ள அனைவரும் முன்வர வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
கொழும்பு அரசியலில் அதிரடி மாற்றம்: பிரதமரானார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!
48 மணி நேரத்தின் பின்னர் பரீட்சைகள் தொடர்பான இறுதி தீர்மானம் - அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெ...
இருக்கின்ற பிரச்சினைகளை விடுத்து எழுந்தமானதாக புதிய பிரச்சினைகளை தோற்றுவிக்கும் முகமாக ஆளுநர் கருத்த...
|
|
|


