விதை உற்பத்தி தொழில்நுட்ப ஆய்வுசாலை ஸ்தாபிப்பு!
Tuesday, April 17th, 2018
விதை உற்பத்தி தொழில்நுட்ப ஆய்வு சாலை ஒன்றை 100 மில்லியன் ரூபா செலவில் ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்றிட்டங்கள் புதிய கலப்பு விதைகளை உருவாக்குதல் மற்றும் தரமான விதைகளை உற்பத்தி செய்து விவசாயிகள் மத்தியில் விநியோகித்தல் போன்ற நோக்கங்களை அடிப்படையாககொண்டு முன்னெடுக்கப்படுகின்றன.
யாழ்ப்பாணம் மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களை கேந்திரமாக கொண்டு இந்த ஆய்வுசாலை ஸ்தாபிக்கப்படவுள்ளது.
மேலும் குறித்த பல்கலைக்கழகங்களின் விவசாய மற்றும் பொறியியல் பீடங்கள் இதற்குரிய தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
இலங்கையில் ஒமிக்ரான் வைரஸ் வேகமாகப் பரவாது - ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வைத்தியர் சந்திம ஜீ...
காய்ச்சலால் பாதிக்கப்பட்டால், உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள் – பொதுமக்களிடம் சுகாதார...
இஸ்ரேல் – இலங்கை இடையிலான நேரடி பயணிகள் விமான சேவை எதிர்வரும் ஒக்டோபர் முதல் ஆரம்பம் – துறைசார் அமைச...
|
|
|


