புகையிரத விபத்து சம்பவங்கள் அதிகரிப்பு!
Saturday, October 21st, 2017
வருடாந்தம் புகையிரதங்களால் இடம்பெறும் விபத்து சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், இந்த வருடத்தில் கடந்த 8 மாத காலப்பகுதியில் புகையிரத மற்றும் புகையிரத நிலையங்களிலிருந்து தன்னை தானே [selfi] புகைப்படம் எடுத்துக்கொண்டவர்களில் 24 இளைஞர், யுவதிகள் உயிரிழந்திருப்பதாக வீதிப்பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.
2016ஆம் ஆண்டில் புகையிரத பாதையில் சென்று விபத்துக்குள்ளாகிய 436 பேரில் 180 பேர் உயிரிழந்துள்ளதுடன் 256 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.இதேவேளை, வாகனங்களுடன் புகையிரதம் மோதியதினால் 84 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
Related posts:
காங்கேசன்துறையிலிருந்து 610 கிலோமீட்டர் தூரத்தில் நிலநடுக்கம் - இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எ...
தீ காயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்த இளம் குடும்ப பெண் பலி - ஆறுகால்மடம் பகுதியில் சோகம்!
வெளித்தலையீடுகள் இல்லாமல் அதிகாரங்களை பகிர்ந்தளித்தலே அரசின் நிலைப்பாடு - ஜப்பான் அமைச்சருக்கு அமைச...
|
|
|


