நாளை வடக்கு – கிழக்கு பகுதிகளில் கடும் மழை பெய்ய வாய்ப்பு!
Tuesday, November 15th, 2016
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை தொடக்கம் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
அவதான நிலையம் விடுத்துள்ள ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தவிர மேல், சப்ரகமுவ, மத்தய ஊவா மற்றும் தெற்கு மாகாணங்களிலும் மழை எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழையுடனான காலநிலையின் போது கடுங்காற்றும் இடைக்கிடையில் இடிமின்னலும் ஏற்படும் எனவும் இது குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Related posts:
அனைத்து ஆயுதங்களும் அழிந்துள்ளதாக இராணுவம் அறிவிப்பு!
கட்டாருக்கான விமான பயணங்களில் மாற்றமில்லை - ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்!
அதிகரிக்கும் போலி தேரர்கள் - விசாரணைகளை ஆரம்பித்தது குற்றப் புலனாய்வு திணைக்களம்!
|
|
|


