நாளைமுதல் எரிவாயு விநியோகிக்க நடவடிக்கை – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!
Tuesday, May 17th, 2022
இரண்டு எரிவாயு கப்பல்களுக்கான கொடுப்பனவாக 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இன்றையதினம் (17) செலுத்தப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் 3700 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று காலை நாட்டை வந்தடையவுள்ளதாக அதன் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மற்றொரு கப்பல் நாளை நாட்டை வந்தடைய உள்ளது.இரண்டு கப்பல்களுக்கும் இன்று பணம் செலுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
இதற்கமைய, எதிர்வரும் மே மாதம் 18 ஆம் திகதிமுதல் தினசரி 80 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இனங்காணப்படாத சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்துவதற்கு அவுஸ்திரேலிய அரசின் ஒத்துழைப்பு!
அமரர் சின்னையா சிகடசுந்தரலிங்கத்தின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி...
11 நிறுவனங்கள் நிதி அமைச்சின் கீழ் - வெளியானது விசேட வர்த்தமானி!
|
|
|


