நாளைமுதல் எதிர்வரும் முதலாம் திகதி வரை மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!

Saturday, May 21st, 2022

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு வசதியாக நாளைமுதல் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படும் விதம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, நாளை மற்றும் 29 ஆம் திகதி ஆகிய தினங்களில் மின்துண்டிப்பு மேற்கொள்ளாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி வரையில் குறித்த இரண்டு தினங்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் மாலை 6.30 க்கு பின்னர் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தினங்களில் பரீட்சை இடம்பெறாத வேளையில் மதியம் 12 மணிமுதல் மாலை 6.30 வரையிலான காலப்பகுதிக்குள் கைத்தொழில் வலயம் மற்றும் கொழும்பு வர்த்தக நகர வலயம் தவிர்ந்த ஏனைய அனைத்து வலயங்களிலும் 1 மணித்தியாலம் 45 நிமிடங்கள் முதல் 2 மணித்தியாலம் 15 நிமிடங்கள் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

கைத்தொழில் வலயங்களில் காலை 5 மணி முதல் 8 மணி வரையிலும், கொழும்பு வர்த்தக நகர வலயத்தில் காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும் 3 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பான வகுப்புகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகளுக்கு இன்றுமுதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கையானது கடந்த 17 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைய இருந்த நிலையில், அதனை இன்று வரை நீடிப்பதற்கு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன அனுமதி வழங்கியிருந்தார்.

அதன்படி 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் ஜூன் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

ஆயிரம் குளங்கள், ஆயிரம் கிராமங்கள் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் குளங்கள் சீரமைப்பு : அமைச்சர் மஹிந்த ...
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 100 மில்லியன் அமெரிக்க டொலர் மேலதிக கடனைப் பெறுவதற்கு அமைச்சரவை அனும...
உத்தேச மின்சாரத்துறை மறுசீரமைப்பு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி - வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசே...