நாளாந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2000 க்கு மேற்பட்டதாக அதிகரிக்கக்கூடும் – தொற்று நோயியல் பிரிவின் பிரதானி எச்சரிக்கை!

Friday, May 7th, 2021

இலங்கையில் பதிவாகும் நாளாந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2000 க்கு மேற்பட்டதாக அதிகரிக்கக்கூடும் என்று தொற்று நோயியல் பிரிவின் பிரதானியும் விசேட வைத்தியருமான சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விசேட வைத்தியர் சுதத் சமரவீர மேலும் தெரிவிக்கையில் –

கடந்த ஒருவார காலமாக நாளாந்தம் எமக்கு பதிவான வைரசு தொற்றாளர்களின் எண்ணிக்கை 1500 இல் இருந்து அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இவ்வாறான நோயாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றனர்.

இதில் வைத்தியசாலைகளுக்கு பாரிய பொறுப்பு உண்டு. கடந்த சில தினங்களாக அதிகரித்த நோயாளர்களின் எண்ணிக்கையை நாம் அவதானித்தோம். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடிய நிலை உண்டு. சில வேளைகளில் இந்த எண்ணிக்கை 2000 த்திலும் பார்க்க அதிகரிக்கும் நிலை உண்டு. தற்போதை இந்த நிலை எவ்வாறு மாற்றமடையும் என்பதை எதிர்வரும் தினங்களில் அறிந்துகொள்ள முடியும்.அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts:


தீர்க்கதரிசன சிந்தனையுடன் திடமாக மக்களுக்காக உழைப்பவர் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா - சிவகுரு பா...
நல்லாட்சியின் நாடகம் விரைவில் நிறுத்தப்படும் - கிளிநொச்சியில் ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் வ...
சினோபார்ம் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்கள் தடையின்றி வெளிநாடுகளுக்கு செல்லலாம் - சுகாதார அமைச்சு அறிவ...