நாளாந்தம் நீரில் மூழ்கி இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது – சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவு எச்சரிக்கை!

Monday, April 8th, 2024

நீரில் மூழ்கி நாளாந்தம் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவு தெரிவித்துள்ளது

ஒவ்வொரு வருடமும் நீரில் மூழ்கி சுமார் 800 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவின் விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் தலைவர் சமூக வைத்திய நிபுணர் சமித்த சிரிதுங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி இலங்கையில் இரண்டு அல்லது மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழக்கின்றனர்.  எங்களின் தகவல்களின்படி இந்த நிலை அதிகரித்து வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்

மேலும் அறிமுகமில்லாத இடங்களில் குளிக்கும் போது அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என நிபுணர் கலாநிதி சமித்த சிரிதுங்க வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: