நாமல் M.P.க்கு பிடியாணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அறுவரைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸினால், பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு இன்று (28) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
‘ஹெலோ கோப்’ நிறுவனத்திடமிருந்து 125 மில்லியன் ரூபாய்கான பங்குகளைக் கொள்வனவு செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழேயே, நாமல் உள்ளிட்ட அறுவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பங்குகளைக் கொள்வனவு செய்வதற்காக, நாமல் ராஜபக்ஷவுக்கு பணம் எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பில் சந்தேகம் நிலவுவதாகவும் அதனால், அவர் உள்ளிட்ட அறுவர் மீது, பணச் சலவைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு கூறியே, இந்தப் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Related posts:
அடுத்த ஐந்து ஆண்டுகளில் விளையாட்டு மூலம் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட இலக்கு – அமைச்சர் நாமல...
13 ஆவது சட்டத்தை மேலும் வலுவாக கொண்டு செல்லமுடியாமைக்கு தமிழ் தரப்பினரே முக்கிய காரணமாக இருந்திருக்...
அதிக வெப்பம் - பாடசாலை மாணவர்களுக்கு சுகாதார அமைச்சினால் அவசர அறிவுறுத்தல்!.
|
|