நான்கு இளைஞர்கள் கைது!

வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நான்கு இளைஞர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொடர் வாள்வெட்டு சம்பவங்கள் யாழில் அதிகரித்துள்ள நிலையில் குறித்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நான்குபேரை யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர்களை தேடிவந்த நிலையிலும் நேற்று இரவு பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் வெவ்வேறு இடங்களில் வைத்து இவர்கள் யாழ் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும் குறித்த சந்தேகநபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளார்.
Related posts:
அபாயகரமான சாலை விபத்துக்களைக் குறைப்பதற்காக இன்றுமுதல் வாகனங்களின் டயர்களின் தரம் குறித்து சோதனை - ...
நுகர்வோர் விவகார அதிகார சபையினர் நாடளாவிய ரீதியில் அதிரடி சோதனை – பல்வேறு முறைகேடுகள் கண்டறிவு!
7 நாட்களில் எரிபொருள் விற்பனை அதிகரிப்பு - பண்டிகை காலங்களில் கூடுதல் விநியோகம் என அமைச்சர் காஞ்சன வ...
|
|