நாட்டை வந்தடையவுள்ள இரு எரிவாயு தாங்கிய கப்பல்கள்!

எரிவாயு தாங்கிய 2 கப்பல்கள் இந்த வாரத்திற்குள் நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் ஒரு கப்பல், 3700 மெட்ரிக் டன் அளவிலான சமையல் எரிவாயுடன் இன்றையதினம் நாட்டை வந்தடையவுள்ளது.
அதேநேரம், மற்றுமொரு கப்பல் எதிர்வரும் 19 ஆம் திகதி நாட்டிற்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமையல் எரிவாயு கையிருப்பில் இல்லாமையினால் எரிவாயுக்காக மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் கடந்த வாரம் அறிவித்திருந்தது.
எனினும், சமையல் எரிவாயுக்கான பணம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமது ட்விட்டர் கணக்கில் நேற்று தெரிவித்தார்.
உடனடியாக அதனை தரையிறக்க மக்களுக்கு விநியோகிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
வித்தியாவின் கொலை வழக்கு 12 சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
ரஷ்யாவிலிருந்து சுற்றுலா பயணிகள் இலங்கை வருகை!
தொலைபேசி, தொலைக்காட்சி சேவை கட்டணங்களும் எதிர்வரும் திங்கள்முதல் அதிகரிப்பு!
|
|