நாட்டுக்குள் கடல் வழியாக போதைப் பொருள் கொண்டுவரப்படுவதை தடுப்பதற்கான விசேட வேலைத்திட்டத்தில் முப்படையினர் – அமைச்சர் சமல் ராஜபக்ஷ!
Friday, September 25th, 2020
சட்டவிரோத போதைப் பொருள் தொடர்பான சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்படும் அதேவேளை போதைப் பொருளை கடல் வழியாக நாட்டுக்குள் கொண்டு வருவதை தடுப்பதற்கான விசேட வேலைத்திட்டத்தில் முப்படையினரும் பொலிசாரும் இணைந்து செயற்படுவதாக அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஒவ்வொரு இடங்களிலும் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவோரை சுற்றிவளைக்கும் அதேவேளை இவை எவ்வாறு நாட்டுக்கு கொண்டுவரப்படுகின்றன? யார் கொண்டு வருகின்றார்கள்? எந்த எந்த இடங்களில் இருந்து கொண்டுவரப்படுகின்றன? அவற்றை கண்டறிவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நாட்டை சூழவும் கடல் பிரதேசங்களில் பாதுகாப்பு வலயங்களை ஏற்படுத்தி முப்படையினரும் பொலிசாரும் இணைந்து நாட்டுக்குள் போதைப் பொருள் கொண்டுவரப்படுவதை தடுத்தால் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் அமைச்சர் சமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


