நாட்டில் விவாகரத்துகள் அதிகரிப்பு – இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு தகவல்!

பெரும்பாலான இலங்கையர்கள் விவாகரத்து மற்றும் பராமரிப்பு வழக்குகளுக்கு சட்ட உதவி கோரியுள்ளதாக இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் மாத்திரம் 8 ஆயிரத்து 431 விவாகரத்து வழக்குகளுக்கு சட்ட உதவி வழங்கப்பட்டுள்ளது.
பராமரிப்பு வழக்குகள் மற்றும் குடும்ப வன்முறை வழக்குகளில் குழந்தைகள், பெண்கள் மற்றும் பெரியவர்களுக்கு அவர்களின் வருமான பதிவுகளை அழைக்காமலேயே சட்டஉதவி வழங்கப்படுகிறது.
சனத்தொகையைப் பொறுத்தமட்டில் கிழக்கு மாகாணத்திலிருந்து அதிகளவான பராமரிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன என இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளர் கெளசல்யா ஹப்பு ஆராச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சட்டவிரோத வலைகளை பயன்படுத்திய மீனவர்கள் கைது!
பங்களாதேஷ் பிரதமருடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தொலைபேசியில் உரையாடல் - இருத்தரப்பு உறவுகளை மேலும் வலு...
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடையே விசேட சந்திப்பு!
|
|