நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை – 4,982 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிப்பு!

Monday, May 6th, 2024

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 4,982 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படி கேகாலை, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 1,542 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் கேகாலை மாவட்டத்தில் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வரகாபொல, ருவன்வெல்ல, யட்டியந்தோட்டை, தெரணியகல, தெஹியோவிட்ட, கலிகமுவ மற்றும் கேகாலை ஆகிய பிரிவுகளில் 646 குடும்பங்களைச் சேர்ந்த 2,702 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


ஒழுக்கம் - அடுத்தவர்கள் மீதான நம்பிக்கை - அடுத்தவர்களின் நம்பிக்கை என்பனவே ஒரு தலைவனது வெற்றியின் ஆன...
புதுவருடத்தை முன்னிட்டு விசேட பேருந்து , ரயில்கள் – 19ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என துறைசார் த...
இல்ல விளையாட்டுப் போட்டிகளை புத்தாண்டு விடுமுறையின் பின்னர் நடத்துமாறு அனைத்து பாடசாலைகளின் அதிபர்...