நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை: நால்வர் மரணம் – 41 பிரதேச செயலக பிரிவுகளில் 5 ஆயிரத்து 790 போர் பாதிப்பு என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவிப்பு!

சீரற்ற கால நிலை காரணமாக நாட்டின் 10 மாவட்டங்களில் 41 பிரதேச செயலகங்க பிரிவுகளில் பாதிப்பு இடம்பெற்றுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் ஆயிரத்து 444 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 790 பேர் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாகவும் அதன் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதத்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இதேநேரம் இந்த அனர்த்தத்தினால் 4 உயிரிழப்புக்ளும் இடம்பெற்றுள்ளன. வெள்ளத்தில் சிக்கி 2 பேரும், மின்னல் தாக்கலுக்குள்ளாகி 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.
மேலும், இதன் போது 03 வீடுகள் முழுமையாகவும், 409 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக மேஜர் ஜெனரல் சுதத்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் சில தினங்களில் காலநிலையில் சிறிதளவு மாற்றம் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
54,000 பட்டதாரிகளுக்கு ஜனவரியில் நியமனம் வழங்க தீர்மானம்!
இன்று மின்வெட்டு இல்லை - எனினும் கட்டமைப்பை நிலைப்படுத்தும் செயற்பாட்டினால் மின்தடை ஏற்படலாம் - பொது...
புதுப்பித்தல் வாழ்க்கைக்கு புதிய நம்பிக்கை தரும் – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி ரணில் வ...
|
|
பொதுமக்களின் அசமந்தப்போகே நாடு இன்று பாரிய அபாயத்தைச் சந்திக்க நேரிடக காரணம் - இராணுவ தளபதி குற்றச்...
ஆபத்து நிலைமை அடையாளம் காணப்பட்ட சந்தர்ப்பத்தில் அனுமதி கிடைக்கவில்லை - எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் நிற...
ஒக்டோபர் முதலாம் திகதிமுதல் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி அல்லது விற்பனை...