நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை: ஏழு பேர் பலி : ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வெளியேற்றம்!
Monday, May 21st, 2018
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏழு பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அத்துடன் 2194 குடும்பங்களைச் சேர்ந்த 8690 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் தங்கள் வசிப்பிடங்களை விட்டு தற்காலிகமாக பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இந்நிலையில் திருகோணமலை, பொலன்னறுவை, பதுளை மற்றும் குருநாகல் ஆகிய பகுதிகளில் மின்னல் தாக்கத்தின் காரணமாகவே ஏழு பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை – சீனா இடையேயான உள்ளக விவகாரங்களில் எந்தவொரு வெளிநாடுகளின் தலையீட்டையும் அனுமதிக்க முடியாது ச...
உரிய பொருளாதார முகாமைத்துவத்தின் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை - நிதி அமைச்சர் பசி...
முரண்பாடுகளுக்கு உள்ளக பேச்சுவார்த்தை மூலமே தீர்வுகாண முடியும் அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தெரிவிப்பு!
|
|
|


