நாட்டில் கொரோனா மரணங்கள் தொடர்ந்தும் பதிவு – ஒரே நாளில் 1531 பேருக்கு தொற்றுறுதி!

Friday, April 30th, 2021

நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 667 ஆக அதிகரித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  நாட்டில் நேற்றையதினம் ஆயிரத்து 531 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து ஆறாயிரத்து 444 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே நாட்டில் மேலும் 362 பேர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்நிலையில், தொற்றிலிருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 95 ஆயிரத்து 445ஆகப் பதிவாகியுள்ளது.

அத்துடன் தொடர்ந்தும் 10 ஆயிரத்து 332 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: