நாட்டில் கடந்த 10 நாட்களில் ஆயிரத்து 800 இற்கும் அதிகமான மரணங்களும் பதிவு!

இலங்கையில் கடந்த 10 நாட்களில் மாத்திரம் பதிவான கொவிட் மரணங்களின் எண்ணிக்கை ஆயிரத்து 800 ஐ கடந்துள்ளது.
இறுதியாக பதிவான 190 கொவிட் மரணங்களுடன், நாட்டில் மொத்த மரணங்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 750 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கமைய, கடந்த 10 நாட்களில், ஆயிரத்து 815 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. இதில் 60 வயதிற்கு மேற்பட்ட ஆயிரத்து 399 பேரின் மரணங்கள் பதிவான நிலையில், இந்த எண்ணிக்கை 77 சதவீதமாக காணப்படுகிறது.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் தரவுகளின் அடிப்படையில், இலங்கையில் கொவிட் மரணங்களின் சதவீதமானது, 1.94 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இந்தியாவுடன் புதிய ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி!
எரிபொருள் மற்றும் மின்சார பிரச்சினைகளுக்கு தீர்வு காண அமைச்சர் ஒருவர் அவசியம் - பொதுப் பயன்பாடுகள் ...
சர்வதேச பாடசாலைகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் - கல்வி அமைச்சர் சு...
|
|