2021 வாக்காளர் பட்டியல் திருத்தங்களை ஒன்லைனில் மேற்கொள்ளலாம் – தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு!
Wednesday, August 4th, 2021
2021 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலைப் புதுப்பிக்க புதிய ஒன்லைன் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் பொது மக்கள் தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் www.election.gov.lk இணையத் தளத்தின் ஊடாக பதிவு மற்றும் திருத்தங்களை மேற்கொள்ளலாம் எனவும் தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
18 வயது நிரம்பிய அனைத்து இலங்கையர்களும் தற்போதுள்ள தேர்தல் பதிவேட்டின் பெயர்களிலுள்ள பிழைகள் அல்லது அச்சுப் பிழைகளைச் சரிசெய்தல், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத நபர்களின் பெயர்களை இணைத்தல் போன்றவற்றை இதன் மூலம் மேற்கொள்ள முடியும் என்றும் தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
உலகப் போர் மூழுமா? உலக அளவில் ஏற்பட்டுள்ள அச்சம்!
திங்கள் அதிகாலைவரை நாடு முழுவதும் பயணத் தடை - இன்றுமுதல் நடைமுறைக்கு வருவதாக இராணுவத் தளபதி அறிவிப்...
பெற்றோலிய பொருட்கள் இறக்குமதி - விநியோகத்திற்கு பொருத்தமான நிறுவனத்தை மதிப்பாய்வு செய்ய குழு நியமனம்...
|
|
|


