அஞ்சல் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் நள்ளிரவுடன் நிறைவு!

Monday, August 5th, 2024

ஜனாதிபதித் தேர்தலில் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ளது.

அதன்படி, அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை இன்று நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக உரியத் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களிடம் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இன்றையதினம் அஞ்சலிடப்படும் விண்ணப்பங்கள் செல்லுபடியாகாது எனவும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதனிடையே ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அதற்கான கரட்டுப்பணத்தைச் செலுத்துவதற்கான கால அவகாசம் எதிர்வரும் 14 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடைய உள்ளது.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான அச்சிடல் செலவு மூன்று மடங்காக அதிகரிக்கக்கூடும் என அரச அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மூலப்பொருட்களின் விலை உயர்வு, வாக்குச் சீட்டின் நீளம் அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாகத் தேர்தலுக்கான அச்சிடல் செலவு அதிகரிக்கக்கூடும் என அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

000

Related posts: