பெற்றோலிய பொருட்கள் இறக்குமதி – விநியோகத்திற்கு பொருத்தமான நிறுவனத்தை மதிப்பாய்வு செய்ய குழு நியமனம் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Saturday, August 6th, 2022

பெற்றோலிய பொருட்களை இறக்குமதி செய்யவும், விநியோகம் மற்றும் விற்பனை செய்வதற்கும், பொருத்தமான நிறுவனங்களை மதிப்பாய்வு செய்வதற்காக, குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் இந்தக் குழு நியமிக்கப்பட்டதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.

மதிப்பாய்வுக்கு முன்னர், அதன் நோக்கங்கள் தொடர்பில் குறித்த குழுவுக்கு விளக்கப்பட்டுள்ளது.

இதனூடாக, இலங்கையின் பெற்றோலிய தொழிற்துறையில், கனியவள கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி யுடன், பல நிறுவனங்கள் ஈடுபட உள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பு செய்வதற்கான பரிந்துரைகளை முன்வைக்க, 8 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம், குறித்த குழு நியமிக்கப்பட்டதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் பதிவின் ஊடாக தெரிவித்துள்ளார்.

ஒரு மாதத்திற்குள் பரிந்துரைகளை முன்வைக்குமாறு அந்த குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

000

Related posts:


வியாபாரிகள், நுகர்வோர்களுக்கு பாதுகாப்பாகவே ஈ.பி.டி.பி செயற்படும் – சாவகச்சேரி சந்தை விவகாரம் தொடர்ப...
ஆசியாவின் சாம்பியன்கள் ஜனாதிபதியால் கௌரவிப்பு - வலைப்பந்தாட்ட வீராங்கனைக்கு 2 மில்லியன் நிதியும் வழங...
நட்டமடைந்த அரச நிறுவனங்களை மறுசீரமைக்காமல் இருக்க முடியாது - வெளிவிவகாரத்துறை இராஜாங்க அமைச்சர் தாரக...