சர்வதேச பாடசாலைகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!
Wednesday, November 9th, 2022
சர்வதேச பாடசாலைகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர், சர்வதேச பாடசாலைகளில் உள்ள இடம், கிடைக்கக்கூடிய வசதிகள் மற்றும் ஆசிரியர்களின் கல்வித் தகைமைகள் போன்ற ஏனைய அளவுகோல்களை கல்வித் திணைக்களம் கவனிக்கும் என்று குறிப்பிட்டார்.
சர்வதேச பாடசாலைகள் தொடர்பான வேறு எந்த அம்சங்களையும் தாங்கள் கட்டுப்படுத்த விரும்பவில்லை என்று அமைச்சர் கூறினார்.
சர்வதேச பாடசாலைகளும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் கீழ் வருவதால், அந்த பாடசாலைகளில் மாணவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படும் எந்தவொரு சம்பவத்தையும் இந்த நிறுவனம் கவனிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கைக்கு 162.6 மில்லியன் டொலர்கள் கடன் தொகையை விடுவிக்க IMF முடிவு!
தலசீமியா நோய் - இளைஞர் யுவதிகள் திருமணத்திற்கு முன் முழு இரத்தப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் - சுக...
வடக்கின் மாணவர்களுக்கு சர்வதேச கல்விக்கு வாய்ப்பு - யாழில் பிரமாண்டமாக திறக்கப்பட்ட "Study In&...
|
|
|


