தேர்தல் பிற்போடப்பட்டால் பதவி விலகுவேன் : மகிந்த!

Tuesday, July 3rd, 2018

ஆயுட்காலம் முடிவடைந்துள்ள மாகாணசபைகளின் தேர்தல்களை இந்த வருட இறுதிக்குள் நடத்திவிடவேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இருப்பினும் மாகாணசபை தேர்தல்களை சந்திக்க அரசாங்கம் தயாராகவில்லை என்ற கருத்துக்கள் மேலோங்கியுள்ளன.
கடந்த உள்ளூராட்சி சபை தேர்தல்களை போன்று மீண்டும் ஒரு தோல்வியை சந்தித்துவிடக்கூடாது என்பதும் தேர்தல்களை நடத்த போதிய நிதிவசதி இல்லை என்பதும் அரசாங்கத்தரப்பில் கூறப்படும் காரணங்களாக உள்ளன.
இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தல் அல்லது பொதுத்தேர்தல் ஆகியவற்றை நடத்திய பின்னர் மாகாணசபை தேர்தல்களை நடத்தக்கூடிய சாத்தியங்களே உள்ளதாக அரசாங்க தரப்பில் இருந்து தகவல்கள்வெளியாகியுள்ளது.
இதனிடையே மாகாணசபை தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தியே தீரவேண்டும் என்றும் நடத்தாது போனால் தாம் பதவி விலகப்போவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related posts:


பலாலியிலிருந்து வெளிநாடுகளுக்கான விமான சேவை மேற்கொள்ள சர்வதேச வான் போக்குவரத்து சங்கம் அனுமதி!
தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - இந்திய வெளிவிவகார ...
யாழ்ப்பாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட 75 வீதமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - வடக்கு மாகாண ச...