நாட்டில் எரிபொருள் பாவனையில் ஏற்பட்ட மாற்றம்!

Wednesday, April 14th, 2021

இலங்கையில் புத்தாண்டு காலத்தில் எரிபொருள் பாவனை அதிகரித்துள்ளதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நாளாந்த எரிபொருள் பாவனை 4 ஆயிரத்து 500 மெட்ரிக் டொன் வரை அதிகரித்துள்ளதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

இந் நிலையில், புத்தாண்டு காலத்தில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாக, தனியார் எரிபொருள் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் தமக்கு வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவுகள் உரிய முறையில் வழங்கப்படாமையே இதற்கான காரணம் எனவும் தனியார் எரிபொருள் தாங்கி உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related posts: