பரீட்சை நிலையங்களில் டெங்கு ஒழிப்பு புகை விசிறும் பணிகள்!

Saturday, July 21st, 2018

பரீட்சைகளின் போது பரீட்சை மத்திய நிலையங்களாக செயற்படும் பாடசாலைகளில் டெங்கு நுளம்பு ஒழிப்பு புகை விசிறும் பணிகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சிடம், பரீட்சைகள் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளமையினால், இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 6 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் முதலாம் திகதிவரை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை 2 ஆயிரத்து 258 மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளன. அத்துடன் அடுத்த மாதம் 5ஆம் திகதி 5ஆம்தர புலமைப்பரிசில் பரீட்சை 3 ஆயிரத்து 50 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது.

இதனால் குறித்த மத்திய நிலையங்களில் டெங்கு நுளம்பு ஒழிப்பு புகை விசிறும் பணிகளை மேற்கொள்ளுமாறு, தேசிய டெங்குநோய் ஒழிப்பு பிரிவு, மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள் ஆகியோரிடமும் பரீட்சைகள் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts: