நாட்டில் உணவுப் பாதுகாப்பு தொடர்பில் சிக்கல் எதுவுமில்லை – விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவிப்பு!
Friday, March 25th, 2022
நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை அதிகரிப்பு காணப்பட்டாலும் உணவு பாதுகாப்பு தொடர்பில் எந்த சிக்கலும் கிடையாதென விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அரிசி, மரக்கறி உள்ளிட்ட பொருட்கள் போதியளவு நாட்டில் தற்போது உள்ளதாகவும் அவற்றை தட்டுப்பாடின்றி சந்தைக்கு விநியோகிக்கும் பொறுப்பை தாம் மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே சபையில் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, எதிர்வரும் புதுவருட பண்டிகைக் காலங்களில் அரசாங்கத்தின் கைவசமுள்ள அரிசியை சந்தைக்கு விடுவித்து மக்களுக்கு குறைந்த விலையில் அரிசியைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தொலைக்காட்சி நாடகங்களை கண்காணிக்க சபை - அமைச்சர் பந்துல குணவர்தன!
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது – இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே!
போதைப்பொருளை அழிக்கும் புதிய இயந்திரம் பொருத்தப்படும் - நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!
|
|
|


