நாட்டில் அதிக மழைவீழ்ச்சி: மின்சார உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்பு – ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் நான்கு மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு எனவும் பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!

Sunday, April 10th, 2022

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அடுத்த வாரத்திற்கான மின்வெட்டு அட்டவணையை அறிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் வேண்டுகோளுக்கு இணங்க மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் நான்கு மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு 13ம் திகதி முதல் 15ம் திகதி வரை மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாது.

ஏப்ரல் 16 மற்றும் 17ஆம் திகதிகளில் 2 மணி நேரம் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டு நடைமுறைப்படும்

இதனிடையே

நாடளாவிய ரீதியில் பெய்து வரும் கடும் மழையினால் நாட்டிற்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான நீரின் அளவை அதிகரிக்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டின் வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு, ஊவா, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் தற்போது 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகின்றமையால் நீர் மின் உற்பத்திக்கு அது உதவும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாட்டிலுள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்து சில காலமாக நீர்மின் உற்பத்தி தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பளம் தொடர்பில் நாடாளுமன்றில் சட்டமூலம் - - தொழில் அமைச்சர் நிமல...
வெளிநாடுகளில் இருந்து வருகை தருபவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க யோசனை - தலைமை தொற்று நோயியல்...
இரசாயன உரத்திற்கு விலை சூத்திரம் - உணவு நெருக்கடியை வெற்றிகரமாக எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக...