உள்ளூராட்சி மன்றங்கள் குறித்து ஆராய பிரதமர் தலைமையில் குழு நியமனம் – அடுத்த வாரம் விஷேட அமைச்சரவைப் பத்திரமும் சமர்ப்பிக்க ஏற்பாடு என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவிப்பு!

Sunday, March 26th, 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்பாளராகத் தோற்றிய அரச அதிகாரிகளின் அடிப்படைச் சம்பளத்தை வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

இத்தேர்தலில் 3000 அரச உத்தியோகத்தர்கள் வேட்பாளர்களாக களமிறங்குவதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்துள்ளார்

தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் அடிப்படை சம்பளம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இதனிடையே அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் தலைமையிலான குறித்த குழுவில், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர, நிதி இராஜாங்க அமைச்சர், மாகாண ஆளுநர்கள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவர்கள் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

உள்ளுராட்சி மன்றங்கள் ஊடாக, மக்களுக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய அனைத்து பணிகளையும் எவ்வித இடையூறுமின்றி தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்குத் தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என இதன்போது இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: