நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (10) மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று பிற்பகலுக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
சேதமடைந்த நாணயத்தாள்: டிசம்பர் மாதத்தின் பின்னர் பயன்படுத்த தடை!
பாதுகாப்பு கடவை அமைத்து தரும்படி கிளிநொச்சியில் மக்கள் போராட்டம்!
ஜூலை 31 க்குப் பின் பூஸ்டர் தடுப்பூசி வழங்கலை நிறுத்த முடிவு!
|
|