ஜூலை 31 க்குப் பின் பூஸ்டர் தடுப்பூசி வழங்கலை நிறுத்த முடிவு!

Tuesday, March 22nd, 2022

எதிர்வரும் ஜூலை 31 ஆம் திகதிக்கு பின்னர் இலங்கைக்கு பூஸ்டர் டோஸ்களை கொண்டு வருவதில்லை என தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் ‘ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

கொவிட் நோய்த்தடுப்புத் திட்டத்தின் கீழ் பொதுமக்களின் செலவில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஃபைசர் தடுப்பூசியை ஜூலை 31 ஆம் திகதியுடன் காலாவதியாகும் முன்னர் பெற்றுக்கொள்ள பொதுமக்கள் விரும்பாத காரணத்தினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாத தொடக்கத்தில், 770 ஆயிரம் ஃபைசர் தடுப்பூசிகள் எஞ்சியிருந்தன. தடுப்பூசி காலாவதியாகும் முன் கொடுக்கப்பட வேண்டுமானால், மீதமுள்ள 180 நாட்களுக்கு தினமும் குறைந்தது 60,000 தடுப்பூசிகளை வழங்குமாறு கொவிட் தடுப்பு செயலணி சுகாதார அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளது.

நாளொன்றுக்கு அறுபதாயிரம் பூஸ்டர் டோஸ்களுக்கான இலக்கு மார்ச் 1 முதல் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 18 நாட்களில் 4 இலட்சத்து 70 ஆயிரத்து 521 பூஸ்டர் ஊசி மட்டுமே போடப்பட்டுள்ளது. இந்தப் பதினெட்டு நாட்களில் ஒரு நாளைக்கு 30,ஆயிரம் ஊசிகளைக் கூட கொடுக்க முடியவில்லை.

நாளாந்த இலக்குகளை அடைய முடியாத நிலையில் ஜூலை 31ஆம் திகதிக்குள் அதிக எண்ணிக்கையிலான ஃபைசர் தடுப்பூசிகள் எஞ்சியிருப்பதால், பூஸ்டர் தடுப்பூசி இனி பொதுமக்களின் பணத்தை வீணடிக்காது என்றும்  அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: