குளிர்காய்ச்சல் வந்தால் எச்சரிக்கை!

Wednesday, April 5th, 2017

 “குளிர்காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்படுமாயின், அது பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறியாகும்” என, தொற்று நோய் விசேட மருத்துவர் சமித கினிகே தெரிவித்துள்ளார். “நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சல், தீவிரமாகப் பரவி வருகின்றது.

இதனால் கர்ப்பிணிப் பெண்கள், முதியோர்கள், சிறிய குழந்தைகள், நோய்த் தடுப்பு சக்தி குறைவான நபர்களும், இந்த நோய் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும்.

குளிர் காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்படுமாயின், உடனடியாக மருத்துவ ஆலோசனைக்கு அமைய சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்” எனவும் அவர் தெரிவித்தார்.

வேகமாகப் பரவிவரும் பன்றிக் காய்ச்சலின் பரவலைத் தடுப்பதற்கு, முன்னேற்பாடு நடவடிக்கைகளை, அரசாங்கம் எடுக்க வேண்டுமென, தொழிற்சங்கங்களும் ஏனைய அமைப்புகளும் கோரியுள்ளன.

அத்தோடு, பன்றிக் காய்ச்சலுக்குச் சிகிச்சையளிக்கும் சுகாதார ஊழியர்களுக்கு, சிகிச்சையளிக்கும் போது அணிவதற்கான முகமூடிகள், போதுமான அளவில் இல்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts: